தங்கம் தரை புரள விநாயகர் சிலைக்கு முன் இந்த வேர் கட்டையை வைத்து வழிபடுங்கள்!!

Photo of author

By Rupa

ஆவணி மாதத்தில் வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தில் மிகவும் விசேஷமாக தினமாக  பார்க்கப்படுகிறது.கணேசன், கணபதி, பிள்ளையார், விகடராஜன்,வினைதீர்த்தான் என்று அன்போடு அழைக்கப்படும் விநாயகப் பெருமான் பிறந்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுரத்தில் என்று கொண்டாடி வருகின்றோம்.

விநாயகர் யானை முகம் கொண்டவர் என்பதால் யானை முகத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.இந்துக்கள் திருவிழா போன்று கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற சனிக்கிழமை(செப்டம்பர் 7) அன்று வருகிறது.

சிவன் மற்றும் பார்வதி தேவியின் மூத்த புதல்வனான விநாயகர் உலகின் முதல் மூத்த கடவுள் என்று போற்றப்படுகிறார்.பக்தர்களின் வினைகளை தீர்த்து தடைகளை தகர்த்து முழுமையான அருளை வழங்கும் விநாயகரை ஆவணி சதுர்த்தி நாளில் பூஜை செய்து வழிபட்டால் கோடி பலன்கள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை மதியத்தில் வளர்பிறை சதுர்த்தி தொடங்கி மறுநாள் சனிக்கிழமை வரை நீடிக்கிறது.இருப்பினும் சூரிய அஸ்தமத்திற்கு பிறகு வரும் சதுர்த்தி தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அதன்படி மறுநாள் சனிக்கிழமை நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது.

நல்ல நேரம் காலை 7:35க்கு தொடங்கி 8:45க்கு முடிவடைகிறது.அதற்குள் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.அதேபோல் மதியம் ஒரு மணிக்கு மேல் எமகண்டம் ஆராம்பமாவதால் அதற்குள் விநாயகர் வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விநாயகர் சிலைக்கு முன்னர் வெள்ளெருக்கு கட்டையை வைத்து வழிபட்டால் செல்வ செழிப்பு ஏற்படும்.வெள்ளெருக்கு கட்டை பூஜை பொருட்கள் விற்கும் கடை மற்றும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை விநாயகர் சதுர்த்திக்கு முந்தின நாள் வாங்கி வந்து பூஜை அறையில் வைத்துவிடவும்.மறுநாள் விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்த பிறகு இந்த வெள்ளெருக்கு கட்டையை நீர் ஊற்றி சுத்தம் செய்து ஒரு தட்டில் வைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்கவும்.இதை விநாயகர் சிலைக்கு முன் வைத்து பூஜை செய்யவும்.பிறகு இதை உங்கள் வீட்டு பீரோ அல்லது பணப் பெட்டியில் வைக்கவும்.இப்படி செய்தால் பண வரவு மற்றும் தன வரவு அதிகரிக்கும்.