wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்!

Photo of author

By CineDesk

wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்!

தமிழகத்தில் விவசாயம், குடிசை வீடுகள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.தற்போது இந்த மீட்டர் கருவியில் பழுது ஏற்பட்டு மின் கணக்கீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பழுதாகியுள்ள மீட்டர் கருவிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  பொருத்தப்பட்டு வருகின்றன.மின்சாரத்துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக  கணக்கெடுப்பை நடத்தாமல், மென்பொருள் மூலம் மின்கணக்கெடுப்பு தேதி வரும் போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு SMS அனுப்பப்படும். அதன் மூலம் மின் நுகர்வோர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். இதன் மூலமாக வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கண்டறிய முடிகிறது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்வதால் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும் இதனால் மின் கட்டணம் அதிகம் வரும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறையால் மின் கட்டணம் குறையும். மின் நுகர்வோரின் பணமும் மிச்சமாகும். இதனால் மின் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் இதனை முறையாக அனைத்து உதவி பொறியாளர்களும் பின்பற்றுமாறு மின்வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.