Wow…. ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள் !!

0
141

Wow…. ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாரா – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்

ரஜினி பாட்டுக்கு தன் குழந்தைகளுடன் மாஸா நடனமாடிய நயன்தாராவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

இதனையடுத்து, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘நானும் ரவுடி தான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி நட்சத்திர நடிகையான நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையையொட்டி விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா… குழந்தைகள் இப்படி சீக்கிரமாக வளர்ந்து விட்டார்களே என்று வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வந்தனர்.

தற்போது, அட்லி பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும், ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மாஸான டிரைலர் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இதைத்தொடர்ந்து, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் இரு குழந்தைகளுடன், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் பட பாட்டிற்கு மாஸா நடனமாடியுள்ளார்.

https://www.instagram.com/p/CwmOAfkvu2M/

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர் மாஸ், செம்ம, சூப்பர் என்று கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CwmOAfkvu2M/

இதோ அந்த வீடியோ

Previous article நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!!
Next articleகண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!!