ஆஹா 2025 ஆம் ஆண்டில் இவ்வளவு பொது விடுமுறையா!! பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு!!

0
101
Wow so many public holidays in 2025!! The Tamil Nadu government released the list!!
Wow so many public holidays in 2025!! The Tamil Nadu government released the list!!

Holidays: தமிழக அரசு 2025 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களின் அரசாணை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பொது விடுமுறை, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு கல்வி நிலையம் மற்றும் தனியார் கல்வி நிலையம் என அனைத்தும் அரசின் பொது விடுமுறை அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் சீராக இயங்கும். இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையுடன் வரும் நாட்களும் 2025-ஆம் ஆண்டிற்கான  பொது விடுமுறையில் சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையில் மொகரம்,குடியரசு தினம்,தெலுங்கு வருட பிறப்பு ஆகியவை வருகிறது. மேலும் ஜனவரி மாதத்தில் மட்டும் 5 நாட்கள் பொது விடுமுறை. அது ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம் ஆகியவை ஆகும்.

பிப்ரவரி மாதத்தில் தைப்பூசம் அன்று விடுமுறை. இந்த மாதத்தில் ஒரு நாட்கள் மட்டுமே பொது விடுமுறை. மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை. மேலும் ஏப்ரல் மற்றும் அக்டோபரில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை. மே, ஜூன், ஜூலை,செப்டம்பர் மற்றும் டிசம்பர்   மாதத்தில் தலா ஒரு நாட்கள். ஆகஸ்ட் மாதத்தில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2025-ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Previous articleகாதல் தோல்விக்கு அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  சிம்பு!!
Next articleரஜினியுடன் இப்படி நடிக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்!! நடிகை குஷ்பூ!!