உங்கள் முகம் பார்ப்பதற்கு சுருங்கி போய் உள்ளதா? இந்த 2 பொருள் போதும் முகம் சுருக்கம் மறைந்துவிடும்..!!

0
262
wrinkles on face

Wrinkles on Face: நமது உடலில் நாம் அழகுக்கு முக்கித்துவம் கொடுக்கும் ஒரு பகுதி என்றால் அது முகம் தான். நாம் ஏதாவது பழங்கள் சாப்பிட்டால் உடனே அதில் ஒரு சிறு பகுதியை எடுத்து முகத்தில் தடவிக்கொள்வோம். முகத்தில் ஒரு சிறிய முகப்பரு அல்லது கரும்புள்ளி வந்துவிட்டால் போதும் உடனே அதனை நீக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து கடைசியில் அதனை மறைய வைத்த பிறகு தான் நமக்கு நிம்மதி வரும்.

அதுபோல ஒரு சிலரின் முகத்தில் உள்ள தோள் சுருங்கி போய் காணப்படும். அது சில சமயங்களில் வெயிலினால் அல்லது வறட்சியினால் கூட ஏற்படலாம். மேலும் ஒரு சிலருக்கு அவர்கள் சாப்பிடும் உணவினால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது க்ரீம் பயன்படுத்தி முகம் சுருக்கம் ஏற்பட்டிருக்கும். நாம் இந்த பதிவில் முகத்தில் உள்ள சுருக்கங்களை எவ்வாறு நீக்குவது என்று (how to remove wrinkles from face in Tamil) பார்க்கலாம்.

டிப்ஸ்

இதற்கு எள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு 2 ஸ்பூன் எள் எடுத்து அதனை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். கருப்பு எள், வெள்ளை எள் இதில் 2-ல் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

பிறகு பயத்த மாவுடன் இந்த எள் சாறை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். பிறகு முகத்தில் இதனை அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

அதன்பிறகு இதனை கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் விரைவில் மறைந்துவிடும்.

மேலும் படிக்க: Tomato Facial: பார்லர் செல்லாமல் இந்த தக்காளி பேசியல் செய்யுங்கள்.. உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்..!

Previous articleகண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!
Next articleஅம்மா தோசைக்கு செய்ற இந்த கார துவையல் யாருக்கெல்லாம் பிடிக்கும்..!! 3 பொருள் போதும் சட்டுனு ரெடி பண்ணிடலாம்..!!