அம்மா தோசைக்கு செய்ற இந்த கார துவையல் யாருக்கெல்லாம் பிடிக்கும்..!! 3 பொருள் போதும் சட்டுனு ரெடி பண்ணிடலாம்..!!

0
112
Poondu Thuvaiyal

Poondu Thuvaiyal: நமது அன்றாட வாழ்க்கையில் காலை, மாலை இருவேளைகளிலும் நாம் சாப்பிடும் உணவு இட்டலி, தோசை, பூரி, பொங்கல், வடை தான். இதற்கு சைடிஸ்யாக எப்போதும் சாம்பார் சாப்பிடுவோம். இல்லையென்றால் விதவிதமான சட்னிகள் செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் 80ஸ், 90ஸ் காலத்தில் நம்முடைய அம்மாவோ, பாட்டியோ நிச்சயம் இந்த பூண்டு, வர மிளகாய் சேர்த்து அம்மியில் அரைத்து துவையல் செய்வார்கள். இதனை  தோசையுடன் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் கூடுதலாக 2 அல்லது 3 தோசகைகள் சாப்பிடுவோம். இந்த துவையல் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வர மிளகாய் – 5
  • பூண்டு – 5 பல்
  • தக்காளி- 1
  • உப்பு-தேவையான அளவு

செய்முறை

இந்த துவையல் அம்மியில் அரைக்க வேண்டும். முதலில் அம்மியை நன்றாக கழுவிட்டு வர மிளகாய் வைத்து அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் பூண்டு சேர்த்து, தோலுடன் இருந்தால் வாசனையாக இருக்கும். இரண்டையும் அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு தக்காளியை வைத்து அரைத்தால் சுவையான பூண்டு கார துவையல் தாயர். இதனை சுட சுட தோசையுடன் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவையாக இருக்கும்.

இதனை நீங்கள் பிரிட்ஜில் வைக்காமல் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். கெட்டு போகாது.

மேலும் படிக்க: Egg 65: 4 முட்டை இருந்தா போதும்..!! ஈஸியா 10 நிமிடத்தில் செய்யலாம்..!!