சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த வைரஸினால் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து சீனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அதிவேகமாக கட்டி வருகிறது. இந்த மருத்துவமனையை ஆறே நாட்களில் கட்டி முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துமனையின் பணி பிப்ரவரி 2ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இந்த மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மருத்துவமனையை கட்டும் பணி இரவு பகலாக நூற்றுக்கணக்கான இயந்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் உதவியால் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனை திறக்கப்பட்ட உடன் கொரனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.