அசத்தலான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சியோமி !

0
108

சியோமி நிறுவனம் சியோமி 13 ப்ரோ மற்றும் சியோமி 13 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் முதன்மையான சீரிஸை சந்தையில் களமிறங்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது சீனாவில் கிடைக்கப்பெறுகிறது. இன்னும் சில வாரங்களில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விற்பனை நடைபெற இருக்கிறது சியோமி 13 சீரிஸானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜெனெரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜும் கிடைக்கிறது. சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனானது வெள்ளை, கருப்பு, பச்சை மற்றும் வெளிர் நீளம் ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறுகிறது.

சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனானது அல்ட்ரா-வைட் அங்கிள் லென்ஸுடன் 50 மெகா பிக்சல் கேமராவை கொண்டிருக்கிறது. லைக்காவல் ஆதரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உங்களால் 8கே வரை தெளிவான திறம் கொண்ட வீடியோக்களை எடுக்க முடியும். இது 6.73 இன்ச் அமோல்டு டிஸ்பிளேயுடன் 120 ஹெட்ஸ் ரிசல்யூஷனை கொண்டுள்ளது, 4820 எம்ஏஹெச் பேட்டரியுடன் இது யூஎஸ்பி-சி சார்ஜரை ஆதரிக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போன் ரூ.59,158க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போன் ரூ.74,542க்கு விற்கப்படுகிறது.

சியோமி 13 ஸ்மார்ட்போனானது 6.36 இன்ச் டிஸ்பிளேயுடன் வருகிறது மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரியுடன் இது யூஎஸ்பி-சி சார்ஜரை ஆதரிக்கிறது. இதில் 12 எம்பி அல்ட்ரா-வைட் அங்கிள் லென்ஸ், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போன் ரூ.47,324க்கு விற்கப்படுகிறது, 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போன் ரூ.50,874க்கு விற்கப்படுகிறது மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போன் ரூ.74,542க்கு விற்கப்படுகிறது.

 

 

author avatar
Savitha