கார் விபத்துக்கு பிறகு யாஷிகாவின் தற்போதைய நிலை!! வைரலாகும் புகைப்படம்!!

0
149
Yashika's current condition after car accident !! Photo goes viral !!
Yashika's current condition after car accident !! Photo goes viral !!

கார் விபத்துக்கு பிறகு யாஷிகாவின் தற்போதைய நிலை!! வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் நடிகையும், மாடலும் ஆவார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரின் கார் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் அவருடன் காரில் பயணித்த நண்பர்களும் சில காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அந்த காரில் இருந்த அவரின் உயிர் தோழியான பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

அதைத் தொடர்ந்து படுகாயமடைந்தார் யாஷிகாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவருக்கு கை, கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்து விட்டதாக மருத்துவர்கள் கூரியிருந்தனர். இவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் இவரின் தோழி உயிரிழந்தது குறித்து இவரிடம் சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த செய்தி இணையதளத்தில் வெளியாகியது.

கடந்த வாரம் முழுவதும் இந்த செய்தி தான் இணையதளத்தில் வைரலாகி வந்தது. மேலும் இந்த விபத்து குறித்து யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் யாஷிகாவிடம் அவரின் உயிர் தோழி இறந்த விஷயத்தை கூரியிருந்தனர். இதனால் மிகவும் மன வேதனை அடைந்த யாஷிகா, தனது இன்ஸ்டகிரம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் எனது உயிர் தோழியை நான் கொன்று விட்டேன் மேலும் அந்த குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் எனக்கு இருக்கும். என்னை மன்னித்துவிடு பவானி என்று அவரின் இறந்து போன தோழியிடம் மன்னிப்பு கேட்டு மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

 

அதை தொடர்ந்து அவரின் உடல்நிலை குறித்தும் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில் அவருக்கு கை, கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்துவிட்டதால் ஆப்பரேஷன் செய்துள்ளதாகவும், மேலும் அவரால் அசைக்க கூட முடியாது ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையில் தான் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக அறிவித்திருந்தார்.

பிரபலங்கள் பலர் அவரின் உடல் நிலை குறித்து கடவுளிடம் பிராத்தனை செய்து வருவதாக தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கெட் வெல் சூன் யாஷிகா என்று எழுதி அவரை சந்திக்க போன நண்பர்களில் ஒருவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இச்செய்தியின் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.

Previous articleவிழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?
Next articleகர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!!