ஓடிடியில் வெளியான யாத்ரா 2 – ரசிகர்களை கவருமா…

0
393
Yatra 2
Yatra 2
நடிகர் ஜீவா மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மறைந்த ஆந்திர முதலமைச்சர்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு,  கடந்த 2019 ஆம்  ஆண்டு,  ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைசசருமான  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாகி வெளியானது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். மஹி வி ராகவ் இயக்கியுள்ள ‘யாத்ரா-2’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கை தொடங்கி தற்போத வரையிலான  சம்பவங்கள் இந்த படத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம்  8-ம் தேதி  இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெளியானது. ஆனால் அங்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிதளவில் படம் வெற்றியை தழுவவில்லை.  இந்த நிலையில், தாற்போது அமேசான் ஓடிடி தளத்தில் யாத்ரா 2 திரைப்படம்  வெளியாகியுள்ளது.
Previous articleதமிழகம் வரும் ராஜ்நாத் சிங் – அடுத்தடுத்த தலைவர்களால் அனல் பறக்கும் களம்….
Next articleகோட் படத்தின் முதல் பாடல் வெளியீடு – ரசிகர்கள் மகிழ்ச்சி