எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!

Photo of author

By Savitha

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!

Savitha

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!

கர்நாடக சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று எடியூரப்பா மகன் விஜயேந்திரா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவர் பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்பாக சட்டமன்ற வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சபாநாயகர் தேர்வுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய யூ டி காதர் உடன் சித்தராமையா சென்று கொண்டிருந்த போது அவரை சந்தித்து முதல்வராக பதவியேற்றத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது விஜயேந்திராவின் தோளில் தட்டி கொடுத்ததை பார்க்கும் போது அப்பாவை போல சிறந்த அரசியல்வாதியாக உயரவேண்டும் என வாழ்த்தியதை போல் இருந்தது.

இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் கே எச் முனியப்பா, லட்சுமி ஹெப்பாள்கர் உள்ளிட்ட பல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் பெற்ற வெற்றிக்கு எடியூரப்பா மகன் விஜயேந்திரா வாழ்த்துக்கள் தெரிவித்தார். முதல்முறையாக விஜயேந்திர சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி சட்டமன்றத்திற்கு வந்துள்ள நிலையில் எதிர் அணியுடன் அவர் நட்பு பாராட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.