மேகதாது அணையை கட்டுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது! புதிய குண்டை போட்ட கர்நாடக அரசு!

0
112

தமிழக அனைத்து கட்சி குழு டெல்லியில் நேற்றைய தினம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கி இருக்கிறார்கள்.

இதற்கிடையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவதற்காக கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்று இருக்கிறார். அங்கே அவர் டெல்லி கர்நாடக இல்லத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கின்றார்.

அதேசமயம் இருந்தாலும் அந்த மாநிலம் மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நாங்கள் எங்களுடைய சக்தியை மீறி முயற்சிகளை மேற்கொள்வோம் மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்திருக்கின்றார்.

Previous articleஉச்ச நீதிமன்றத்தின் கறார் உத்தரவு! களத்தில் இறங்கும் தமிழக அரசு!
Next article‘சூப்பர்ஸ்டாரா இல்லன்னா தல அஜித்தா?’ ரசிகர்கள் குழப்பம்!! ஒரே நாளில் இரு பிரபலங்களின் படம் ரிலீஸ்?!!