யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! முதலமைச்சர் அதிரடி!

Photo of author

By Sakthi

பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் விருப்பப்பட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கட்சியின் மேலிடம் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது நான் அதனை பயன்படுத்த முயற்சிக்கின்றேன், அதேபோல மக்கள் சேவையாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா.

எனக்கு எதிராக கருத்துத் தெரிவிப்போறின் யூகங்களுக்கு நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய கட்சியின் மேலிடம் நான் ராஜினாமா செய்ய வேண்டுமென்று விருப்பப்பட்டால் நான் ராஜினாமா செய்ய தயார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிவதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறேன். நான் யாரையும் விமர்சிக்க மாட்டேன் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு மாற்றமில்லை என்று நான் இதுவரை நினைத்ததில்லை திறமை வாய்ந்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் கட்சியின் மேலிடத்திற்கு என் மீது நம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கிறதோ அது வரைக்கும் நான் முதலமைச்சராக இருப்பேன். ஒருசில சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகள் எனக்கு எதிராக மேலிடத்தில் புகார் கூறியும் மற்றும் கடிதம் எழுதியும் இருக்கிறார்கள். அது தொடர்பாக நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில், கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் ஓ சி என் அஸ்வத் நாராயண் மற்றும் சி டி ரவி உள்ளிட்டோர் சரியான சமயத்தில் யூகங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார்கள்