இந்தியாவில் நேற்று மட்டும் 61749 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 61,749 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 31,05,185 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 846 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 57,692 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 56,896 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினார்களின் எண்ணிக்கை 23,36,796 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 7,10,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment