பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

Photo of author

By Vinoth

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

Vinoth

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் பொம்மைநாயகி என்ற படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.

சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

அப்படி ஒரு படமாக உருவாகி வருகிறது ‘பொம்மை நாயகி’ திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் கடற்கரை பின்னணியில் யோகி பாபுவோடு ஒரு சிறுமி இடம்பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கியுள்ளார்.