‘அட்வாஸ்னோட வாங்க…’ தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு!

0
247

‘அட்வாஸ்னோட வாங்க…’ தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு!

நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் உருவாகும் தாதா என்ற படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது அந்த போஸ்டரை பகிர்ந்துள்ள யோகி பாபு “இந்த படத்தில் நித்தின் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன்.

தயவு செய்து இதைப்போன்று விளம்பரம் செய்யாதீர்கள்” எனக் கூறியுள்ளார். யோகி பாபுவின் பெயரைப் போட்டால் படத்துக்கு பிஸ்னஸ் கிடைக்கும் என்பதால் பல தயாரிப்பாளர்கள் இதுபோல செய்துவருகின்றனட்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நல்ல கதையோடு யோகி பாபுவை அணுகும் தயாரிப்பாளர்களுக்கு யோகி பாபு வேறு மாதிரி ஷாக் கொடுக்கிறாராம். அதாவது கதையை கேட்பதற்கு முன்பே தனது சம்பளம் 2 கோடி என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாரம்.

அதுபோல கதைக் கேட்பதற்கு முன்பே ‘அட்வான்ஸ் பணத்தோடு வாங்க’ என்றும் கூறி வருகிறாராம். இதனால் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நல்ல கதையோடு அவரை அணுகலாம் என நினைத்தாலும் அது முடியாமல் போகிறதாம்.

Previous articleதொடர் கனமழை இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleஇந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here