வடிவேலுவுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகர்… ரஜினியின் ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

0
247

வடிவேலுவுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகர்… ரஜினியின் ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினிகாந்தின் கடைசி சில படங்களான காலா, பேட்ட, அண்ணாத்த எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அடுத்து அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தன. சமூகவலைதளங்களில் பல ட்ரோல்களும் உருவாகின. இதையடுத்து இப்போது இந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் நெல்சன் தீவிரமாக மறுவிவாதம் செய்து மெருகேற்றியுள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதுபோல நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது யோகிபாபுதான் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் யோகி பாபுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்களில் மகாபலிபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் படத்தில் நடிப்பவர்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Previous articleவந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..
Next articleவங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here