நகைச்சுவை கதாபாத்திரத்தை விரும்பாத யோகிபாபு!! எனக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் விருப்பம்!!

நகைச்சுவை கதாபாத்திரத்தை விரும்பாத யோகிபாபு!! எனக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் விருப்பம்!!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக உள்ளார். மான்கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய வெற்றிப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் அடித்துள்ளார். இவர் 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு ஹவில்தார். அதனால் யோகிபாபு குழந்தையாக இருக்கும்பொழுதே நிறைய பயணிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக இவர் 1990களில் தொடர்ந்து ஜம்முவில் படித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. இவர் ஒரு நடிகராக விரும்புகிறாரா என்று கண்டறிந்தார்.பின்னர் அவரை ஒரு இளைய கலைஞராக அழைத்துச் சென்றார். யோகிபாபு இந்த தொடரில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். அதைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டில் அவர் பட்டத்து யானை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக தோன்றினார்.மேலும் அந்த நேரத்தில் ஷாருக்கானுடன் இந்தி திரைப்படமான சென்னை எக்ஸ்ப்ரஸிலும் நடித்திருந்தார். இவர் திரைக்கு வந்து சில வருடங்களிலேயே அனைத்து ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்தார். இதன்பிறகு யோகிபாபு 2020 இல் மஞ்சு பார்கவியை மணந்தார்.

இந்த நிலையில் இவருக்கு தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் ஒரு கனமான கதாபாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைக் குறித்து இவர் பேசுகையில் சிரிப்பை வரவைக்கும் காமெடி கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானது. ஆனால் அதனை எளிதில் யாராலும் செய்து விடமுடியாது. மேலும் எனக்கு பன்முகத் தன்மை கொண்ட கதாபாத்திரங்களான அனைத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பது தான் விருப்பம். நகைச்சுவையில் சாதனை படைத்த தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளாக நடித்தவர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி. இவர்கள் காமெடி மட்டுமல்லாமல் பன்முக குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களைப் போலவே எனக்கும் காமெடி மட்டுமல்லாமல் உணர்ச்சி குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க விருப்பம். மேலும் இந்த படத்தில் எனக்கு இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை தந்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Leave a Comment