பொழுதுபோக்கில் நீங்கள் ஒரு “Beast” – தளபதி பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷின் செம்ம டான்ஸ்!

0
80

 

https://www.instagram.com/reel/CQa0-DXJwBQ/?utm_source=ig_web_copy_link

 

உலகம் முழுவதும் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தளபதி 65 என்று சொல்லப்படும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

அனைத்து பிரபலங்களும் பொதுமக்களும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். டிவிட்டரில் இன்றைக்கு டிரெண்டி தளபதி விஜயின் பிறந்த நாள்தான்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இளைய தளபதி விஜய் அவர்களின் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் போடும் அனைத்து ஸ்டெப்ஸகளும் நம்ம தளபதி விஜயின் ஒவ்வொரு படத்தின் ஒவ்வொரு செயலை குறிக்கிறது. தளபதி விஜய் அவர்களுடன் பைரவா மற்றும் சர்க்கார் என இரண்டு 2 படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

மிகவும் அட்டகாசமாக ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி அவர் தளபதி விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த நடனத்திற்கு அனைவரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த பாடலை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்சனும் எழுதியுள்ளார். ” ஆல்தோட்ட பூபதிக்கு நடனம். தளபதியின் தீவிர ரசிகை! நீங்கள் நடிப்பதில் மிகச் சிறந்தவர் மட்டுமல்ல. பொழுதுபோக்கு என்று வந்து விட்டால் நீங்கள் ஒரு Beast” என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Kowsalya