எதற்கெடுத்தாலும் அழும் அழுமூஞ்சி நபரா நீங்கள்!! உங்களுக்கான மகிழ்ச்சி தகவல் காத்திருக்கிறது!!

Photo of author

By Rupa

எதற்கெடுத்தாலும் அழும் அழுமூஞ்சி நபரா நீங்கள்!! உங்களுக்கான மகிழ்ச்சி தகவல் காத்திருக்கிறது!!

இன்றைய உலகில் மன கசப்பு,உறவு முறிவு,மன அழுத்தம்,துரோகம்,தோல்வி என்று பல காரணங்களால் மனிதர்கள் அழுகின்றனர்.சிலருக்கு மன தைரியம் அதிகமாக இருக்கும்.சிலரால் சின்ன விஷயங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாது.இவர்களெல்லாம் அழுவதையே ஒரு வேலையாக வைத்திருப்பார்கள்.

துக்க நிகழ்வாக இருந்தாலும் சரி சந்தோசத்தை கொடுக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி ஏதுவாக இருந்தாலும் கண்களில் குளம் போல் தண்ணீர் வந்துவிடும்.இது மனிதனின் இயல்பு தான்.

இப்படி அழுவுவதால் மனதில் இருக்கின்ற பாரம் குறையும்.தாங்க முடியாத நிகழ்வு நடந்துவிட்டால் அழுது விடுங்கள்.இல்லையேல் அவை மனதில் ரணத்தை ஏற்படுத்தி விடும்.

ஆனால் எதற்கெடுத்தாலும் அழுது அழுமூஞ்சி என்ற பெயர் எடுத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.ஒரு மனிதனுக்கு சிரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ அதேபோல் தான் அழுவதும்.

மனம் விட்டு அழுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1)முதலில் மனதில் எதையும் தேக்கி வைக்காதீர்கள்.தாங்கிக் கொள்ள முடியாத நிகழ்வு நடந்து விட்டால் அழுது விடுங்கள்.இவ்வாறு செய்வதால் பாரம் குறையும்.

2)மனதிற்குள் கஷ்டங்கள் அதிகமானால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.எனவே கஷ்டங்களை நினைத்து அழுதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

3)அழுவது கண்களுக்கு நல்லது.கண்களில் இருக்கின்ற அழுக்கு மற்றும் வறட்சி நீங்கி கண்கள் ஈரப்பதமாக இருக்க அவ்வப்போது அழ வேண்டும்.

4)அழுதால் மன பாரம் குறையும்.இதனால் ஒரு வித நிம்மதி,சந்தோஷம் கிடைக்கும்.

5)அழும் பொழுது சிலருக்கு நாசியில் இருந்து சளி வெளியேறும்.இதனால் நாசியில் இருக்கின்ற அழுக்கு,தூசுகள் எளிதில் வெளியேறும்.