ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

Photo of author

By Rupa

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

Rupa

Updated on:

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதுல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி
பட்டறை நடத்திடவும், அதனை தொடர்ந்து மாநில அளவிலான கலைக்காட்சி சென்னையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பனை மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம் பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது.

இலவச ஓவியப்பயிற்சி முகாம் 23.06.2022 அன்று தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும் மாணவ மாணவியர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில
அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு
வைக்கப்படும்.

இதில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை(Drawing Board) வழங்கப்படும். வரைபட பொருட்கள் மதிய உணவு பயிற்சியாளர்கள் எடுத்து வர வேண்டும்.

பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல்
விவரங்கள் அறிய (0452-2566420 மற்றும் 9842596563) என்ற எண்களை தொடர்பு
கொண்டு, மாவட்டத்தில் உள்ள கலை ஆர்வமிக்க மாணவ, மாணவியர்கள் பயன்பெறுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.