டிடியால் தான் நீ இந்த இடத்திற்கு வந்துள்ளாய்! பிரியங்காவை வறுத்தெடுத்த பிரபல தொகுப்பாளர்!

Photo of author

By Rupa

Cooku with Comali: தற்பொழுது சமூக வலைதளங்கள் முழுவதிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரியங்கா மணிமேகலை இடையிலான பிரச்சனை குறித்து பிரபல தொகுப்பாளர் ரஞ்சித் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே தொகுப்பாளினி மணிமேகலை சொந்த வேலையாக சென்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலையில் மணிமேகலை அவர்கள் பெண் குக் அவருடைய வேலையை விட்டு என்னுடைய வேலையில் தலையிடுகிறார்.

குக்காக செயல்படாமல் ஆங்கராக செயல்படுகிறார். எனக்கு சுயமரியாதை முக்கியம். எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சனை குறித்து தொகுப்பாளர் ரஞ்சித் அவர்களும் அவருடைய மனைவியும் சேர்ந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தொகுப்பாளர் ரஞ்சித் அவர்களும் அவருடைய மனைவியும் பேசியது என்னவென்றால் “குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இது முதல் முறை அல்ல.

ஏற்கனவே மணிமேகலை அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். ஆம் ஒரு சீசனில் கோமாளியாக இருக்கும் பொழுது சுனிதா அவர்களுக்கும் மணிமேகலை அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்பொழுது மணிமேகலை அவர்கள் சொந்த வேலை காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சிறிய இடைவேளை எடுத்துக் கொள்வதாக கூறி விலகினார்.

இதையடுத்து குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் மணிமேகலை அவர்கள் கோமாளியாக இல்லாமல் ஆங்கராக களமிறங்கினார். இந்த போட்டியில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா அவர்கள் போட்டியாளராக அதாவது குக்காக களமிறங்கினார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த மோதல் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் மணிமேகலை அவர்கள் சுயமரியாதை முக்கியம் என்று நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். அதற்கு மணிமேகலை கூறிய காரணமும் உண்மை தான். மணிமேகலை கூறும் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கின்றது.

தற்பொழுது நீங்கள் ஒரு வேலையை செய்து கொண்டு இருக்க உங்க வேலையில் நான் மூக்கை நுழைத்தால் உங்களுக்கு கோபம் வரும். சரியா. அதைப் போலத்தான் மணிமேகலை அவர்களின் வேலையில் பிரியங்கா மூக்கை நுழைத்ததால் மணிமேகலைக்கு கோபம் வந்தது. அது சரிதான்.

அதாவது கடந்த வாரம் குக் வித் கோமாளி எபிசோட்டில் நடிகை திவ்யா துரைசாமி அவர்கள் எலிமினேட் ஆகி செல்வார். அப்பொழுது இறுதியாக மணிமேகலை பேச வேண்டிய இடத்தில் பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் தான் என்னவாக இருக்கின்றோம் என்பதை மறந்து ஆங்கராக அவரே இறுதி உரையை பேசிவிடுவார். அங்கு இருந்துதான் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது.

அந்த எபிசௌட்டில் பிரச்சனை உருவானதால் பிரியங்கா கோபம் அடைந்து கத்தியுள்ளார். இது தொடர்பான ஆடியோ கூட இணையத்தில் வைரலாகி வந்தது. பின்னர் பிரியங்கா செட்டை விட்டு வெளியே வந்து கேரவேனில் சென்று அமர்ந்து கொண்டார். இதையடுத்து விஜய் டிவி டீமும் பிரியங்காவிடம் சென்று பேசிய பொழுது பிரியங்கா அவர்களிடம் நான் எனக்கு வரும் வேலையை செய்கின்றேன்.

ஆனால் நான் என்னவோ மணிமேகலையின் வேலையில் குறுக்கிடுவது போல பேசுகிறார் என்று கூற பிரியங்காவை விஜய் டிவி டீம் சமாதானம் செய்தது. அன்று நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் சென்றுவிட்டதால் பிரச்சனையும் அன்றுடன் முடிந்தது.

இதையடுத்து கடந்த வாரம் ஒளிபரப்பான அரையிறுதி எபிசோட்டில் விஜய் டிவி டீம் மணிமேகலை அவர்களிடம் சென்று பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளனர். அதில் கோபம் அடைந்த மணிமேகலை அவர்கள் நிகழ்ச்சியை விட்டு சென்றுள்ளார்.

இன்னொரு உதாரணம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளராக காபா ஆனந்த் அவர்களும் சிறந்த தொகுப்பாளினியுக பிரியங்காவும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சிறந்த தொகுப்பாளர் விருந்து ரியோ ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைப் போல சிறந்த தொகுப்பாளினிக்கு உரிய விருதை மணிமேகலை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது குறித்து பிரியங்கா அவர்கள் மணிமேகலை அவர்களிடம் எப்பொழுதும் குத்திக் காட்டி பேசியுள்ளார். ஏன் விஜய் டிவியிம் கூட மணிமேகலையை ஓரம் கட்டுவதாக சந்தேகம் எழுகின்றது.

நான் இந்த பேட்டியின் மூலம் ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்கின்றேன். சில வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் தொகுப்பாளினி என்றால் அது டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி அவர்கள் தான். அவர் உடல்நலக் குறைவு காரணமாக விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறிவிட்டார்.

இருந்தாலும் டிடி நினைத்திருந்தால் எப்படியாவது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியம். இருப்பினும் அவர் விலகி உங்களுக்காக இந்த இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார். டிடி மட்டும் அவருடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியுமா?” என்று கூறியுள்ளார்.