இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

Photo of author

By Divya

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

Divya

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை இளநரை பாதிப்பு.இந்த இளநரை தோன்ற ஆரமித்து விட்டால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.இதற்கு உணவு முறை,தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய தீர்வு காண்பது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:-

*கருவேப்பிலை – 1 கப்

*கற்றாழை ஜெல் – 1தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் கடாய் வைத்து அவை சூடேறியதும் கருவேப்பிலை இலை 1 கப் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.பிறகு அவை நன்கு கருகி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

2.அவற்றை ஆறவைத்து பின் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும்.

3.அவற்றை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ள வேண்டும்.

4.பின்னர் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி எடுத்து அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியில் நன்கு கலந்து கொள்ளவும்.

5.பிறகு இந்த இயற்கை ஹேர் டையை தலை முடிகளின் வேர் பகுதிகளில் படும் படி தடவி 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.பிறகு ஷாம்பு இல்லாமல் சுத்தமான நீரிலில் முடியை நன்கு அலச வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம் என்றால் நீண்ட நாட்களாக இருக்கின்ற வெள்ளை முடி நாளடைவில் கருப்பாக மாறும்.