உங்கள் வீட்டின் கரண்ட் பில்லை நீங்களே கணக்கிடலாம்!! எளிமையான வழி இதோ!! 

Photo of author

By Divya

உங்கள் வீட்டின் கரண்ட் பில்லை நீங்களே கணக்கிடலாம்!! எளிமையான வழி இதோ!!

தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கு 0-100 யூனிட் இலவசமாக வழங்கப்டுகிறது.எல்லா மாதங்களும் ஒரே மாதிரியான கரண்ட் பில் வருவதில்லை.நாம் மின்சாரத்தை பயன்படுத்துவதை பொறுத்து ஒவ்வொரு மாதமும் கரண்ட் பில் வேறுபடுகிறது.கோடை காலத்தில் பேன்,ஏசி,ஏர் கூலர் போன்ற மின்சாதனங்களின் பயன்பாடு அதிகளவு இருப்பதால் ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் ஷாக் அடிக்கும் அளவிற்கு கரண்ட் பில் இருக்கும்.

ஆனால் மழைக்காலங்களில் மின்சாதனங்களின் பயன்பாடு குறைவாக இருப்பதினால் அம்மாதங்களில் கரண்ட் பில் குறைவாக இருக்கும்.எது எப்படியாக இருந்தாலும் நீங்கள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறீர்கள்? அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டு தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.பிறகு 101-200 யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.2.25,201-400 யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.4.50,401-500 யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.6,501-600 யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.8.00,601-800 யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.9,801-1000 யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.10 மற்றும் 1000 யூனிட்டிற்கு மேல் சென்றால் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்று நீங்கள் உபயோகிக்கும் யூனிட்டின் அளவை பொறுத்து கட்டணம் மாறுபடும்.

நீங்கள் tneb-இன் https://www.tnebnet.org/awp/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிதாக கணக்கு ஒன்றை உருவாக்கி உங்கள் வீட்டு மீட்டர் எண்ணை உங்கள் கணக்கோடு இணைத்து விடுங்கள்.அதில் கடந்த கால ரீடிங் பதிவுகள்,ரீடிங் எடுக்கப்பட்ட தேதி,மின்சார கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் காட்டும்.

அதில் உள்ள கடைசி மீட்டர் ரீடிங்கைமீட்டரில் இருக்கின்ற ரீடிங்குடன் கழித்து கணக்கிட்டால் உங்கள் மின்சார கட்டணம் என்னவென்பது தெரிந்துவிடும்.அதேபோல் https://www.tnebnet.org/awp/tariffMaster?execution=e1s2 என்ற இணைய தளம் வாயிலாகவும் நீங்கள் கட்ட வேண்டிய மின்சார கட்டணத்தை கணக்கிட்டு அறிந்து கொள்ள முடியும்.