Breaking News, Life Style

உடல் வலி இல்லாமல் தண்ணீர் தொட்டியை சீக்கிரமாக சுத்தம் செய்யலாம்!!

Photo of author

By Divya

தண்ணீர் தொட்டியில் வேகமாக பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மை கொண்ட நாவல் பழ மரத்தின் துண்டுகளை தண்ணீர் தொட்டியில் போடுவதன் மூலம் தொட்டியில் அழுக்காகாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நம் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியமாக உள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் நம் உடலில் பலவித நோய்களை ஏற்படுத்த அது காரணமாக அமையலாம். மேலும் அதிக காலம் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இருந்தால் பூஞ்சை மற்றும் பாக்டீரியா ஏற்பட்டு தண்ணீர் கெட்டுப் போகும். இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் நம் உடலில் பலவித பிரச்சனைகள் தோன்றும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை மிகவும் எளிமையான முறையில் எந்தவித உடல் வலியும் இன்றி எவ்வாறு செய்து முடிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

ஜாமுன் மரம் எனப்படும் நாவற்பழ மரத்தில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. எனவே இம்மரத்தின் துண்டுகளை நம் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் போட்டு வைத்தால் அது தண்ணீர் தொட்டியில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அளித்து விடும் என்றும், மேலும் நம்முடைய தண்ணீர் தொட்டியை 10 வருடத்திற்கு தூய்மையாக வைத்துக் கொள்ளும் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய 200 கிராம் எடையுள்ள நாவல் மரத்துண்டு போதுமானதாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மரத்துண்டுகளுக்கு பதிலாக நாவல் மரத்தின் கிளைகளையும் பயன்படுத்தலாம். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மர துண்டுகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த இந்தியன் ரிசர்வ் பேங்க் வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

ஒருவருடைய சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது!! தவெக கட்சித் தலைவர்!!