வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!!

0
153
#image_title

வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!!

உலக அளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை. ஆண் கொசுக்கள் தாவரசாற்றை மட்டுமே பருகும். பெண்கொசுக்கள் தான் மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும்.

உலகில் உள்ள மற்ற உயிரினங்களை விட மனிதர்கள் கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் நோய்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு வகையான கொசுக்களால் உங்களுக்கு என்ன நோய் வரும் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் , அவற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

கொசுவினால் பரவக்கூடிய சில நோய்கள்:

டெங்கு

மலேரியா

சிக்குன்குனியா

மஞ்சள் காய்ச்சல்

ஜிகா வைரஸ்

ஜப்பானிய மூளையழற்சி

நிணநீர் ஃபைலேரியாசிஸ்

கொசுவை விரட்ட தேவையான பொருட்கள்:

1. ஒரு ரூபாய் ஷாம்பூ

2. மஞ்சள் தூள்

3. தேங்காய் எண்ணெய்

செய்முறை:

ஒரு கப்பில் ஒரு ஷாம்பு பிரித்து சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து வீடு முழுவதும் ஸ்பிரே செய்து வருகையில் கொசுக்கள் வீட்டினுள் வரவே வராது. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தவர்களிலேயே வீட்டில் கொசுக்களே இருக்காது.

மஞ்சத்தூளில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் கிருமி நாசினியாகவும் உதவுகிறது ஆகையால் கொசுக்கள் வராமல் தடுக்கும். தேங்காய் எண்ணெய்யை கை கால்களில் பூசிக்கொண்டு தூங்கும் பொழுது கொசுக்கள் கடிக்காது. அவ்வாறு இருக்கையில் தேங்காய் எண்ணெயை கலந்து ஸ்ப்ரே செய்யும் பொழுது வீடுகளில் கொசுக்கள் வராது.