வீட்டில் இருந்தபடி 5 நிமிடத்தில் 9 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி என்று தெரியுமா?

Photo of author

By Divya

வீட்டில் இருந்தபடி 5 நிமிடத்தில் 9 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி என்று தெரியுமா?

Divya

Updated on:

You can get a loan of up to 9 lakhs in 5 minutes from the comfort of your home!! Do you know how?

வீட்டில் இருந்தபடி 5 நிமிடத்தில் 9 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி என்று தெரியுமா?

இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது.விலைவாசி உயர்வு,சுபச்செலவுகள்,எதிர்பாரா செலவுகளுக்கு கடன் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.சேமிப்பு பற்றி சரியான திட்டமிடல் இல்லாமை,குறைவான ஊதியம்,வரவிற்கு மீறிய செலவு,வருமானத்தை அதிகப்படுத்தாமை போன்ற காரணங்களால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன் பெறுவது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல.அவசரத் தேவைக்கு அடுத்தவரிடம் ஒரு ரூபாய் கூட பெறமுடியாத நிலை இருக்கும் பொழுது எந்த ஒரு சிரமமின்றி எளிதில் கடன் பெறுவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான கூகுள் பே(Google Pay) மூலம் தங்களுக்கு தேவையான தொகையை கடனாக பெற முடியும்.குறைந்த தொகை தான் கடனாக கிடைக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.கூகுள் பே மூலம் அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை கடனாக பெற முடியும்.

கூகுள் பே ஆப்பில் Get Loan என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.பிறகு Apply Now என்பதை கிளிக் செய்யவும்.பிறகு கேட்கக்கூடிய விவரங்களை ஒவ்வொன்றாக நிரப்ப வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

*ஆதார் அட்டை விபரம்
*பான் அட்டை விபரம்
*மொபைல் நம்பர்
*மின்னஞ்சல் ஐடி
*வேலை விவரம்
*முகவரி

நீங்கள் பதிவு செய்த விவரத்தை வைத்து உங்கள் சிபில் ஸ்கோர் கணக்கிடப்படும்.உங்கள் சிபில் ஸ்கோரை வைத்து நீங்கள் கேட்கும் தொகை அல்லது ரூ. 10,000 முதல் ரூ. 9 லட்சம் இடையிலான தொகை குறித்த தவணை விபரம் மற்றும் EMI விபரம் காண்பிக்கப்படும்.தவணை மற்றும் EMI உங்களுக்கு ஓகே என்றால் உடனே உங்கள் வங்கி கணக்கிற்கு கடன் தொகை அனுப்பி வைக்கப்படும்.