சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இரவு நேரங்களில் செயல்படும் பார்களில் பாடல்களை ஓடவிட்டு மது போதையில் இளம்பெண்களும், இளைஞர்களும் ஜோடியாக நடனமாடும் கலாச்சாரம் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. இதில், பெரும்பாலானவை முறையாக அனுமதி பெறாமல் காவல்துறையினருக்கு கட்டிங் கொடுத்துவிட்டே நடப்பதாக சொல்கிறார்கள். சில சமயம் திடீரென பாரில் போலீசார் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இன்னமும் பல இடங்களில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற பார்களுக்கு செல்ல வேண்டுமெனில் ஆண்களுக்கு காதலி வேண்டும். ஏனெனில், அங்கு போய் நம்மோடு ஆடுவதற்கு ஒரு பெண் வேண்டும். ஆனால், எல்லோருக்கும் காதலிகள் இருப்பதில்லை. இந்த கவலையை போக்கவே இப்போது வாடகை காதலிகள் வந்துவிட்டர்கள். சென்னை தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பெணின்சுலா என்கிற பாரில் வாடகை காதலிகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே போனபின் உங்களுக்கு வாடகை காதலி வேண்டுமெனில் பணம் செலுத்தி டோக்கன் வாங்க வேண்டும். அந்த டோக்கனை கொடுத்தால் ஒரு பெண் உங்களோடு நடனமாட ஒருவர். ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடமாடுவார். மேலும், நடனமாட வேண்டுமெனில் மீண்டும் நீங்கள் டோக்கன் வாங்க வேண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதோடு, அந்த பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் அங்கே உள்ள அறைகளில் பலான விஷயங்களும் நடக்கிறது என பகீர் கிளப்புகிறார்கள்.
வறுமையில் இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து இந்த தொழிலில் தள்ளுகிறார்களாம். இரவில் இருட்டில் தங்கள் வறுமையை இப்படி சில இளம் பெண்கள் போக்கி கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. மன மகிழ் மன்றம் என்கிற பெயரில் லைசென்ஸ் வாங்கி இதுபோன்ற வேலைகளை அந்த பார் நிர்வாகம் செய்கிறது என்கிறார்கள். இதை போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. இதுபற்றி பார் நிர்வாகத்திடம் கேட்டால் ‘அப்படி இங்கு நடப்பது இல்லை. காதலிகள் மற்றும் பெண் தோழிகளுடன் வருபவர்கள் மட்டுமே நடனமாடுகிறார்கள்’ என சொல்கிறார்கள். போலீசார் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி மூலம் இது பலருக்கும் தெரியவந்திருக்கிறது.
இந்த செய்தி தொடர்பான வீடியோவை காண கீழே கிளக் செய்யுங்கள்…