அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே இங்கு செல்லமுடியும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாக தீபம் ஏற்றப்படும்.அதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மாகா தீபம் பெரிய அளவில் கொண்டாடப்படுவதால் ஏராளாமான பக்தர்கள் வருகைப்புரிவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கூறப்படுகிறது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் மலை மீது ஏறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலை மீதி ஏற அனுமதிக்கப்படுவார்கள் அதற்காக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும் மலை மீது ஏறும் பக்கதர்கள் தண்ணீர் பாட்டிலை தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்து செல்ல கூடாது என அறிவித்துள்ளார்.