உங்களில் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறைய இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை முள்ளங்கி – ஒன்று
2)இஞ்சி – ஒரு பீஸ்
3)வெள்ளை சோள மாவு – ஒரு கப்
4)சீரகம் – கால் தேக்கரண்டி
5)பச்சை மிளகாய் – ஒன்று
6)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
7)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு
8)உப்பு – சிறிதளவு
9)கொத்தமல்லி தழை
10)எள் – கால் தேக்கரண்டி
11)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
12)கோதுமை மாவு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு வெள்ளை முள்ளங்கியை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.அடுத்து இதை தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் சிறிதளவு சீரகம்,பெருங்காயத் தூள் மற்றும் வர மிளகாய் விதைகள் சேர்த்து பொரியவிட வேண்டும்.
பிறகு அரைத்த முள்ளங்கி விழுதை அதில் போட்டு வதக்க வேண்டும்.இந்த கலவை நன்றாக வதங்கி வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அதன் பின்னர் ஒரு கப் சோள மாவை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு கரண்டி கொண்டு கலந்துவிட வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி எள்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.அடுத்து அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு ஒரு வாழையிலையில் தயாரித்து வைத்துள்ள மாவு சிறு உருண்டையாக வைத்து அடை வடிவத்திற்கு மாற்றி சூடாகி கொண்டிருக்கும் தோசைக் கல்லில் வைத்து வேகவிட வேண்டும்.இப்படி செய்யப்பட்ட அடையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும்.