ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!

0
159
You can no longer withdraw money by message without an ATM card! New introduction of the bank!
You can no longer withdraw money by message without an ATM card! New introduction of the bank!

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம். ஏடிஎம் கார்டை வைத்து எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.இது 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இருக்கும். ஏடிஎம் கார்டு மறந்து வைத்து விட்டு சென்றால் மெசேஜ்யின் மூலம் பணம் எடுக்கலாம். இந்த வசதி எல்லா இடங்களிலும் கிடையாது.

சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் மட்டுமே கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும். இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கார்டு இல்லாமல் பணத்தை எடுக்கக் கூடிய வசதியை வழங்குகிறது. மேலும் பல ஆன்லைன் ஆப்பின் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பும் வசதி உண்டு.

ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் மூலம் ஏற்படும் மோசடையும் தடுக்கிறது. இந்த முறையில் ஏடிஎம் இயந்திரத்தின் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் நீங்கள் எடுக்க நினைக்கும் தொகையை உள்ளிட்டு செய்தால் பரிவர்த்தனைக்காக QR code உருவாக்கபடும்.

பின்னர் வாடிக்கையாளர் யுபிஐ இந்த குறியீட்டை ஸ்கேன் செய்யவேண்டும். பின்னர் பின் உள்ளிட வேண்டும். இதன் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் பணம் பெறலாம்.ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தற்போது இந்த வசதியை செயல்படுத்தி வருகின்றன.

Previous articleவலிமை பட பாணியில் தேனியில் சங்கிலி பறிப்பு சம்பவம்! கணவருடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
Next articleதமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!