உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இனி Watsapp மூலம் டவுன்லோட் செய்யலாம்!! முழு விவரங்கள் இதோ!!

Photo of author

By Divya

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இனி Watsapp மூலம் டவுன்லோட் செய்யலாம்!! முழு விவரங்கள் இதோ!!

இந்திய குடிமகன்களுக்கு முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பிற சேவைகளை பெற பயன்படுகிறது.அதேபோல் அரசுக்கு வருமான வரி செலுத்த மற்றும் வங்கியில் கடன் பெற,முதலீடு தொடங்க பான் கார்டு முக்கிய ஆவணமாக திகழ்கிறது.இந்த ஆதார் மற்றும் பான் கார்டை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாது.சில நேரங்களில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தொலைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே இப்படி பல அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படும் ஆதார் மற்றும் பான் கார்டை இனி வாட்ஸ்அப் மூலம் ஈஸியான டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆதார் மற்றும் பான் கார்டை டவுன்லோடு செய்வது எப்படி?

முதலில் “My Gov” வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் என்ற “9013151515” நம்பரை உங்கள் மொபைலில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட இந்த நம்பருக்கு வாட்ஸ்அப்பில் “Hi” என்று குறுஞ்செய்தி அனுப்பவும்.இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பிய உடன் நமஸ்தே என்று தொடங்கக்கூடிய ஆட்டோமேட்டிக் மெசேஜ் தங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அனுப்பப்பட்டிற்கும் குறுஞ்செய்தியின் இறுதியில் “Cowin services”,“DigiLocker services” என்று 2 சர்வீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.இதில் “DigiLocker services” என்பதைத் தேர்வு செய்யவும்.

பிறகு தங்களிடம் கேட்கப்படும் DigiLocker கணக்கு இருக்கிறதா? என்ற கேள்வி ஆம் அல்லது இல்லை என்ற பதிலை தேர்வு செய்யவும்.அடுத்து ஆதார்,பான் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.

முதலில் 12 இலக்க ஆதார் நம்பரை பதிவு செய்யவும்.பிறகு உங்கள் மொபைல் நம்பருக்கு பெறப்பட்ட OTP எண்ணை என்டர் செய்யவும்.அதன் பிறகு நீங்கள் டிஜிலாக்கரில் சேமித்த ஆதார்,பான் ஆவணங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.