வெறும் 5 ஸ்டெப் பில் இன்டர்நெட் இல்லாமல் ஜி பே போன் பே மூலம் பணம் அனுப்பலாம்! எப்படி தெரியுமா?
வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று இந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையாக ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நாம் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் தற்பொழுது போன் பே மற்றும் ஜீ பே ஆன்லைன் பரிவர்த்தனை வந்துவிட்டது.
இந்தியா டிஜிட்டல் முறையில் தொடர்ந்து மாறி வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அனைத்து வங்கிகளுக்கும் ,கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோட்டாக் ஓர் எச்சரிக்கை விடுத்தார். அது என்னவென்றால், மக்கள் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் வணிகம் பற்றி வங்கிகளின் பார்வை தவறாக உள்ளது. யுபிஐ மூலம் செலுத்தும் முறையில் கூகுள் பே மற்றும் போன் பே விற்கு வங்கிகள் அதிக முன்னுரிமை வழங்கி விட்டது. அதனால் நாளடைவில் அதன் ஆதிக்கம் அதிகமாக கூடும்.
23yjவங்கிகள் பெரும் இழப்பை சந்திக்கும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இணைய வசதி இருந்தால் மட்டுமே நாம் டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்த முடியும். தற்பொழுது அதனை அகற்றி இணைய வசதி இல்லாமலேயே டிஜிட்டல் பரிவர்த்தனையை உபயோகிக்க முடியும். அதற்கு வெறும் 50 பைசா மட்டுமே செலவாகும். எவ்வாறு இணைய வசதி இல்லாமல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்பதை கீழ்க்கண்டவற்றில் காணலாம்.
இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய விரும்புவோர் முதலில் BHIM ஆப்பிள் தங்களை பதிவு செய்து யுபிஐ கணக்கை தொடங்க வேண்டும். மேலும் அந்த கணக்கில் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள முறையான தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக உங்களது மொபைலில் *99# என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அவ்வாறு அழைப்பு விடுத்த உடன் பணம் அனுப்புவது பணம் பெறுவது உங்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் பார்ப்பது என பரிவர்த்தனைகள் மற்றும் யூபி பெண்ணுடன் 7 விபரங்களைக் கொண்ட வரிசைப்பட்டியல் உங்களது மொபைல் ஸ்கிரீனில் தோன்றும்.
நீங்கள் பணம் அனுப்ப வேண்டுமென்றால் 1 என்ற எண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய யு பி ஐ டி வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்சி கோட் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தியும் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
ஐந்தாவதாக நீங்கள் அனுப்பும் தொகையை பதிவிட வேண்டும்
இறுதியில் உங்கள் யுபிஐ பின்னை பதிவிட வேண்டும். பிறகு சென்ட் என்பதை தொட்டவுடன் நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விவரங்களை கொடுத்தீர்களோ அவர்கள் கணக்கிற்கு பணம் சென்றுவிடும். அதனை அடுத்து உங்களுக்கு பணம் அனுப்பி அதற்கான குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். இந்த சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்கு வெறும் 50 பைசா மட்டுமே செலவாகும். இனி இணைய வசதி இல்லாமல் வெறும் 50 பைசா செலவிலேயே பண பரிவர்த்தனை செய்து விடலாம்.