அடுத்தவன் பேச்சை கேட்டா உருப்பட முடியாது.. இதுக்கு உதாரணமான ரஜினி!!

Photo of author

By Gayathri

அடுத்தவன் பேச்சை கேட்டா உருப்பட முடியாது.. இதுக்கு உதாரணமான ரஜினி!!

Gayathri

Updated on:

You can't develop if you listen to someone else's speech.. Rajini is an example of this!!

தமிழ் சினிமா துறையில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவருடைய ஆரம்ப கட்டத்தில் இவர் இயக்குனர் ஸ்ரீதர் உடன் அதிகாளவில் படம் நடித்து வந்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் ரஜினியை வைத்து இயக்கிய மாங்குடி மைனர் மற்றும் இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களுக்காக இளையராஜாவை இசையமைக்க வைத்திருக்கின்றனர்.

ஆனால் இளையராஜா இசையமைக்க மறுக்கவே இயக்குனர் ஸ்ரீதரின் நண்பர்கள் மற்றும் அவரின் அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்த சந்தான பாரதி பி வாசு இவர்கள் அனைவரும் ஸ்ரீதருக்காக சென்ற இளையராஜாவிடம் பேசி ஒரு வழியாக படத்தில் இசையமைக்க சம்மதம் வாங்கியுள்ளனர்.

இப்படி ரஜினியின் உடைய ஒவ்வொரு படத்திற்கும் போராடி வெற்றி கொடுத்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் ரஜினியின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு பின் அவருடன் இணைந்து படம் ஒன்றினை இயக்க முடிவு செய்து ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் முதலில் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

அதன்பின் யாரோ ரஜினியிடம் சென்று ஸ்ரீதர் அவர்கள் முன்பு போல் இல்லை அவர் இந்த ட்ரெண்டிங்கான கதை எல்லாம் எடுப்பதில்லை எனக் கூறி ரஜினியினுடைய மனசை கலைக்கவே சொல் புத்தி கேட்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஸ்ரீதர் உடன் படம் பண்ண மறுத்துவிட்டாராம்.

இதனால் கோபம் கொண்ட ஸ்ரீதர் அவர்கள் மோகனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார். அந்தத் திரைப்படம் தான் தென்றலே என்னைத் தொடு. இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் இன்னும் ட்ரெண்டிங் தான் இருக்கிறேன் என நிருபத்திரிக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள்.