தமிழகத்தில் சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இ-பாஸ் முறையை மத்திய,மாநில அரசு கொண்டு வந்த நிலையில், சமீபத்தில் இ-பாஸ்ன்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நடைமுறைக்கு வந்துள்ளது.
தற்பொழுது கொரோனா பரவலில் விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதினால், மக்கள் அனைவரும் சுற்றுலாத் தலமான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு அதிக அளவில் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதனை கருத்தில்கொண்டு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவின் பெயரில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இ-பாஸ் கட்டாயம் வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.