நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால் கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும் தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது.
ஷிப்ட் டைம் முடிந்ததும் கணினியை முடக்க ஒரு மென்பொருளை அமைந்துள்ளது. மேலும் அந்த கணினியில் உங்கள் ஷிப்ட் டைம் முடிந்துவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் கணினி நிறுத்தப்படும் தயவு செய்து வீட்டிற்கு செல்லுங்கள் என திரையிட்டு பின்பு கணினி நிறுத்தப்படும்.
தயவு செய்து வீட்டிற்கு செல்லுங்கள் என வருகிறது. இதனை அந்த ஐடி நிறுவனத்தின் ஹெச்ஆர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால் அவர்களை கனிவுடன் எச்சரித்து வீட்டிற்கு அனுப்புகின்றது. தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் கூடுதல் தொகைக்காக அதிக நேரத்துக்கு பணிபுரிவது, குறைந்த ஊதியத்துக்காக பணிபுரிவது, விடுமுறை நாள்களில் பணிபுரிவது போன்றவை அதிகம் பார்க்க முடிகின்றது அதனால் தான் இந்த புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.