விஷயம் தெரியுமா உங்களுக்கு?? விஜய் டிவில வெள்ளித்திரை நடிகை புது சீரியல்ல நடிக்க போறாங்களாம்!!

Photo of author

By CineDesk

விஷயம் தெரியுமா உங்களுக்கு?? விஜய் டிவில வெள்ளித்திரை நடிகை புது சீரியல்ல நடிக்க போறாங்களாம்!!

CineDesk

You know the thing ?? Vijay TV silver screen actress may fight to act in new serial !!

விஷயம் தெரியுமா உங்களுக்கு?? விஜய் டிவில வெள்ளித்திரை நடிகை புது சீரியல்ல நடிக்க போறாங்களாம்!!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி இது தமிழில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு ஒளி அலை வரிசை ஆகும். மேலும் இதை ரசிகர்கள் விஜய் டிவி என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். இந்த தொலைக்காட்சி இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படும். அதோடு மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றது. இந்த தொலைக்காட்சியில் ஆரம்பகாலத்தில் மக்களிடம் சென்று மக்களை கவர்ந்த பல தொடர்கள் உள்ளன.

அதில் கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை, காத்துக் கருப்பு, மதுரை, கல்யாணம் முதல் காதல், வரை சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஈரமான-ரோஜாவே, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, காற்றுக்கென்ன வேலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் நிலையில் மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் பொழுதுபோக்குக்காக பலர் டிவி சீரியலுக்கு அடிமையாகியுள்ளனர். எந்த ஒரு திரைப்பட பிடிப்பும் நடைபெறாத நிலையில் சீரியல் படப்பிடிப்புகள் மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் திரைப்பட நடிகை ரேவதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாமிருவர் நமக்கிருவர் தொடர் மற்றும் ராஜபார்வை தொடர் நடிகைகளுடன் இணைந்து
புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து விஜய் டிவி ரசிகர்கள் விஜய் டிவியில் ஏதேனும் புதிய சீரியல் உருவாக உள்ளதா? இல்லை இது எப்போதோ  எடுக்கப்பட்ட பழைய புகைப்படமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அண்மையில் விஜய் டிவியில் பல புதிய சீரியல் உருவாகி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் மீண்டும் ஒரு புதிய சீரியல் உருவாகுமா? என்றும் அந்த சீரியலில் நடிகை ரேவதி பங்கேற்க போகிறாரா? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் ரேவதி அவர்கள் ஒருவேளை சீரியல் நடித்தால் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.