அண்ணாமலையோ மோடியோ.. நீ யாருடன் உறவு வைத்து இந்த பதவி கிடைத்தது தெரியும்! வெளியான ஆபாச ஆடியோ! 

Photo of author

By Rupa

அண்ணாமலையோ மோடியோ.. நீ யாருடன் உறவு வைத்து இந்த பதவி கிடைத்தது தெரியும்! வெளியான ஆபாச ஆடியோ! 

Rupa

You know who you got this position by having relationship with.. Annamalai or Modi call anyone! Family fight within the party!

அண்ணாமலையோ மோடியோ.. நீ யாருடன் உறவு வைத்து இந்த பதவி கிடைத்தது தெரியும்! வெளியான ஆபாச ஆடியோ!

திமுக-வின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தான் திருச்சியில் சிவா. இவருடைய மகன்தான் சூர்யா சிவா. சூர்யா சிவா தனது தந்தையிடம் திமுகவில் ஏதேனும் ஒரு பதவியை வாங்கி தரும் படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை அதனை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு இருக்கும் நிலையில் சூர்யா திமுகவை விட்டு வெளியேறி பாஜகவில்  இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார்.

திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை ,பாஜகவில் இவருக்கு ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்கு பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணை தேர்வு செய்தனர். சூரிய சிவாவிற்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டது

இதனால் சூர்யாவிற்கும் டெய்சி சரணுக்கும் பெருமளவில் சண்டை ஏற்பட்டது. இது பாஜக கட்சி நிர்வாகிகள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். டெய்சி சரண் யூடியூப் சேனலில் மக்கள் எதிர்கொள்ளும் நோய்க்கான மருத்துவ ரீதியான குறிப்புகளை வழங்கி வருகிறார். இவர் சென்ற ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் சூர்யா சிவாவிற்கு வழங்கப்பட்ட ஓபிசி பதவி பிடிக்காத காரணத்தால் டெய்சி சரணிடம் வம்பு இழுத்து சண்டை போட்டு உள்ளார்.

இருவரும் சரமாரியாக தகாத வார்த்தைகளால் பேசி சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோவானது தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் ஓபிசி அணி தலைவர் சூர்யா சிவா தகாத வார்த்தைகளால் டெய்சி சரணை திட்டியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உனக்கெல்லாம் சிறுபான்மையினர் அணி தலைவர் பதவியா ? நீ எந்த மூத்த நிர்வாகியிடம் உறவு கொண்டு இந்த பதவி வாங்கினாய்  என்பது தெரியும்.

லாரி வைத்து உன்னை தூக்கி விடுவேன், பின்பு அனாதையாக சாக வேண்டும். நான் இவ்வாறு பேசுகிறேன் என்பதை நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்.அது அண்ணாமலையாக இருந்தாலும் சரி,ஏன் மோடியாகவோ, அமித்ஷாவாகவும் இருந்தாலும்சரி  நேரடியாக சென்று சொல் எனக் கூறியுள்ளார். நீ இனி வாழ முடியாத அளவிற்கு நான் செய்வேன்.மருத்துவமனை எதுவும் நடத்த நான் விட மாட்டேன்.

இவ்வாறு சிறுபான்மையினர் தலைவியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது. அண்ணாமலைக்கு நெருக்கத்திலிருந்து நற்பெயர் எடுத்தவரே இவ்வாறு பேசியது குறித்து அண்ணாமலை சற்று கலக்கத்தில் உள்ளார். கட்சிக்குள்ளேயே இருக்கும் பெண் தலைவருக்கு ஒரு பாதுகாப்பு கூட இல்லையா என்று இதர கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.