உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற ஆசையா? அப்போ இந்த சூப்பரான 5 பொருளை சாப்பிடுங்க !

Photo of author

By Savitha

உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஊட்டச்சத்து நிறைந்தது தானா என்பதும். குறைவான அளவு நாம் உணவு எடுத்துக்கொண்டாலும் அதில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளதா என்பதையும் நாம் கவனித்து சாப்பிட வேண்டும். உடலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைத்தால் தான் நம்மால் உடல் எடை இழப்புக்கள் செயல்முறையில் முழுமையாக ஈடுபட முடியும். இப்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம்.Fresh Badam, Packaging Type: Plastic Box at Rs 825/kilogram in Chennai |  ID: 20117199112

1) புரதசத்து, வைட்டமின் இ, மக்னீசியம் மற்றும் நார்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாக பாதாம் பருப்பு விளங்குகிறது. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் பாதாம் சாப்பிட்டால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் மற்றும் இது உங்கள் உடலுக்கு போதுமான ஆற்றலையும் வழங்குகிறது.Flax Seeds 101: Nutrition Facts and Health Benefits

2) ஆளிவிதைகள் உடல் எடை குறைப்பில் சிறப்பாக செயல்படுகிறது, இதனை நீங்கள் விதையாகவோ அல்லது எண்ணெயாகவோ உட்கொள்ளலாம். இது உங்கள் உடலிலுள்ள கொலஸ்டராலின் அளவை கட்டுப்படுத்துகிறது, இதுதவிர செரிமானம், சிறந்த சருமம், புற்றுநோய் எதிர்ப்பு, உடல் எடை குறைப்பு போன்ற நன்மைகளை வழங்குகிறது.The Health Benefits of Cinnamon

3) பெரும்பாலான இந்திய உணவுகளில் மசாலாக்களில் சுவைக்காக சேர்க்கப்படும் பட்டை உங்கள் உடல் எடை குறைப்பில் நல்ல பலனை தருகிறது. இது உங்களின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது, கொலஸ்ட்ராலை குறைக்கிறது மற்றும் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது.Sweet Potato India: More than Superfood

4) சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் அதிகளவு வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்சத்து, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ளது. இதனை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடல் எடை குறைகிறது.Eggs: Our Versatile Knights in Shining Calcium Armour!

5) புரதசத்து அதிகம் நிறைந்திருக்கும் முட்டையானது உடல் எடை குறைப்பில் சிறந்த பங்கினை வழங்குகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் புற ஊதாக்கதிர்கள் மூலம் சருமம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.