குடும்பத்தையே இப்படி செதச்சிட்டீங்களே! ரியா சக்கரவர்த்தியின் ஆவேசம்!

Photo of author

By Parthipan K

பாலிவுட் பிரபல நடிகர் சுந்தர் சிங் தனது வீட்டில் மர்மமான முறையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சாம்சங்கின் காதலியான ரியாத் சக்கரவர்த்தியின்மீது பண மோசடி புகாரை சுஷாந்த் சிங்கின் தந்தை மும்பை போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த  நிலையில்  சக்கரவர்த்தி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்த விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான சக்கரவர்த்தி தற்போது போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

மத்திய போதை பொருள் குற்ற பிரிவினரால் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவருடைய சகோதரன், சிங்கின் மேலாளர் ஆகியோர் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரியா சக்கரவர்த்தியின் தந்தை செய்தியாளர்களிடம் ” என்னுடைய குடும்பத்திற்கு இப்படி நடுத்தெருவிற்கு இழுத்து செதச்சிட்டீங்களே! ஒரு நடுத்தர குடும்பத்திற்கு இந்த நிலைமையா? என்று ஆவேசமான குரலில் பேட்டியளித்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் மரணத்தில் தப்பித்த ரியா சக்கரவர்த்தி தற்போது போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில்  கைதாகி இருப்பது பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் பலரும் இந்த போதை பொருள் தடுப்பு விவகாரத்தில் கைதாகி வருகின்றனர். கன்னட படங்களில் முன்னணி நடிகையான ராகினி திவேதி அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னும் யார் யார் இந்த போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கைது செய்யப் போகிறார்களோ என்று திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.