இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் இனி அதிமுக கட்சியின் பெயரையோ அல்லது கொடியையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்பொழுது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சியின் கோடி, பெயர், சின்னம் எதையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று(நவம்பர்7) சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “அதிமுக கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நீக்கப்பட பின்னரும் அதிமுக கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுகின்றார். அதே போல அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார்.

என்னை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அதிமுக கட்சியின் புதுச் செயலாளராக நியமித்துள்ளது. ஆனால் தொண்டர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகின்றார்.

எனவே அதிமுக என்ற பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, அல்லது கட்சிக் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை அவர்கள் யாரும் அதிமுக பெயர், கோடி, சின்னம் இவற்றை பயன்படுத்த இடைகால தடையும் விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவலையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று(நவம்பர்7) நீதிபதி சதீஷ்குமார் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எனவே பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் “இன்னும் எத்தனை முறை இதையே கூறுவீர்கள். இன்னும் எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள். இன்னும் எத்தனை முறை கால அவகாசம் கேட்பார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் விசாரணையின் முடிவில் “அதிமுக கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சிக் கொடி, அதிமுக சின்னம் அடங்கிய லெட்டர் பேடு எதையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பயன்படுத்திக் கூடாது” என்று கடைகளைத் தடை விதித்து உத்தரவிட்டார்.