Cinema

பிக்  பாஸ் சீசன்-4ல் பங்கேற்காமல் தெறித்து ஓடிய இளம் நடிகர்கள்! சிக்கிய விஜய் டிவி பிரபலம்! 

 

விஜய் டிவியில்  2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துகொண்டு வருகிறது. இதனை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார். மேலும் இந்த ஆண்டு  பேரிடர் காரணமாக ஜூன் மாதம் இறுதியில்  தொடங்கி கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. 

இந்நிகழ்ச்சிக்காக பல இளம் நடிகர்கள் அழைக்கப்பட்ட போதும் அனைவரும்   பேரிடர் காரணமாக ஐந்து மாதங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் தற்போது யாரும் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய் டிவியின் பிரபலமான  ரியோ இந்நிகழ்ச்சியில் பங்கு பெற போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரியோ சன்  மியூசிக்கல் தொகுப்பாளராக இருந்து வந்தார். பிறகு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அதன்பிறகு அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவர் சிவகார்த்திகேயனுடன் கொண்ட நட்பின் காரணமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்றார்.

அப்படமும் வெற்றியைக் கண்டது. அதன்பிறகு அவர் ரம்யா நம்பீசன் உடன் மற்றொரு படமும் நடித்தார் அப்படம் விரைவில் திரைக்கு வருவதாக  வரஉள்ளது.

 தற்போது இவர்  விஜய் டிவியில் நடைபெற உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின்றன இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது இவர் ஒவ்வொரு வருடமும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு  நெட்டிசன்களுக்கு இதுவே மிகப்பெரிய கண்டெண்ட் களமானது. மக்கள் அனைவரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியினை காண ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

 அப்போ இந்த வருஷமும் கண்டெண்ட் பஞ்சமே இருக்காது !

Leave a Comment