சென்னையில் திருமணமான இளம் நடிகை திடீர் தற்கொலை! யார் காரணம்?

0
160

சென்னையில் 23 வயது இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரைப் படங்களில் துணை நடிகையாக இருந்து வரும் பத்மஜா என்ற இளம்பெண் கணவரை பிரிந்து தனியாக திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதால் வீட்டின் உரிமையாளர் உடனடியாக பத்மஜாவிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியிருக்கிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மஜா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலைக்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவில் அழுது கொண்டே தனது தற்கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரிடமும் அவருடன் தங்கியிருந்த வாலிபர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் பத்மஜாவின் கணவருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். பத்மஜாவுடன் தங்கி இருந்த வாலிபர் பிடிபட்டால் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleமக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?
Next articleஇரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர்: பார்வை பறிபோய் பரிதாப நிலையில் மாணவர், சென்னையில் பரபரப்பு