காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்!

Photo of author

By CineDesk

காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்!

விழுப்புரம் மாவட்டதிலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ஆலம்பாடி கிராமத்திலுள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் தான் கலையரசன். இவர் கடலூர் நத்தவெளியில் வசித்து வரும் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கிக் கொண்டு அருகிலுள்ள மொபைல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரைப்போலவே அந்த கடையில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவரும் அவருடன் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஒரே கடையில் வேலை செய்து வரும் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இதுவே அவர்களுக்கிடையே காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் ஏறக்குறைய 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் தங்கியிருந்த அக்கா வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளார்கள்.

பின்னர் இருவரும் திருப்பூர் சென்று அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் உன் நிர்வாண படத்தை மொபைலில் எனக்கு அனுப்பு என்று கலையரசன் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அவரும் தன்னுடைய காதலன் தானே என நம்பி நிர்வான படத்தை கலையரசனுக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு தொடர்ச்சியாக அது போன்று படங்களை கலையரசன் கேட்கவே சந்தேகமடைந்துள்ளர். இதனால் அவர்,கலையரசனுடன் பேசுவதை அதன்பிறகு தவிர்த்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கலையரசன் அவருடைய காதலியை பழிவாங்க நினைத்து, இருவரும் காதலிக்கும் போது தனக்கு அனுப்பிய நிர்வாண படங்களை சமூக வலைத்தளமான பேஸ் புக்கில் பதிவு செய்திருக்கிறார். இதைப்பற்றி அறிந்த அந்த பெண் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைக்க, உடனடியாக இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கலையரசனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தன்னுடைய நிர்வான படம் இணையத்தில் வெளியானதை பற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மற்ற பெண்கள் போன்று அழுது மூலையில் முடங்கமல், தற்கொலைக்கு முயற்சி செய்யமால், தைரியமாக இது தொடர்பாக கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தது மற்ற பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

இவ்வாறு மிகவும் துணிச்சலுடன் செயல்பட்ட அந்த பெண்ணை அனைவரும் பாராட்டுவும் செய்தனர். மேலும், ஒருவரை காதலிக்கும் முன்பு அவரை பற்றி முழு கவனம் தேவை என்றும் காவல்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.