காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை!

0
209
Young man tortured and beaten to death for talking to girlfriend! Torture done by tying him to a tree!
Young man tortured and beaten to death for talking to girlfriend! Torture done by tying him to a tree!

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை!

குஜராத் மாநிலத்தில் வதோரதா என்ற மாவட்டத்தில் பட்ரா தாலுகா சோகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்ஷ் ராவல். 20 வயதான அவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். ஆனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் தரப்பில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தனது மகள் ஆர்த்தி உடனான காதலை விட்டு விடுமாறும், அப்படி இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆர்த்தியின் தந்தை காளிதாஸ் ராவலிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார்.

அவரின் எல்லா விதமான எச்சரிக்கையையும் மீறி அவர் தனது காதலியை அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். நேற்றும் அதேபோல் காளிதாசன் தோட்டம் அருகே நின்று ஆர்த்தியும், ராகுலும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். தனது மகளிடம் ராவல் பேசுவதை ஆர்த்தியின் தாயார் பார்த்து உள்ளார். எனவே ராவல் அங்கிருந்து ஓடி தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த இவர்களது சந்திப்பு குறித்து ஆர்த்தியின் தாய் அவரது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்கள் ரமேஷ் மாலி, கிரண் மாலி, மோகன் மாலி ஆகிய 4 பேரும் ராவளின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த வீட்டில் ராவல் மட்டுமே தனியாக இருந்ததால், வீட்டிலிருந்து தரதரவென வெளியே இழுத்து வீசி உள்ளனர்.

மேலும் ராகுலுக்கு ஒரு புடவையை அணிவித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் ராவலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாக ராவல் அங்கேயே மயக்கம் அடைந்து விட்டார். ஆனாலும் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். காளிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்குதல் நடத்துவது குறித்து தகவல் அறிந்த ராவலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள்ளாக சம்பவ இடத்திலிருந்து களிதாஸ் மற்றும் அவரது உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு அவரது உறவினர்கள் ராவலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது காதலியின் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்கள் ரமேஷ் மாலி, மோகன் மாலி, கிரண் மாலி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராவலை கட்டி வைத்து அடித்த சம்பவத்தில் அவர்களது உறவினர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். எனவே அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!
Next articleமீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!