சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்! தாக்கப்பட்ட வனவிலங்கு பாதுகாவலர்!

0
120
Young people who made fun of little girls! Attacked wildlife activist!
Young people who made fun of little girls! Attacked wildlife activist!

சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்! தாக்கப்பட்ட வனவிலங்கு பாதுகாவலர்!

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் தரிகெரே தாலுகா சந்தவேரி கிராமத்தில் வனவிலங்கு சரணாலய பாதுகாவலர் கிருஷ் ,தனியார் நிறுவன தொண்டு ஊழியரும் மற்றும் அவரது மகள்களும் ஒரு ஜிப்பின் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது சந்தவேரி கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து இருந்த இளைஞர்கள் அந்த சிறுமிகளை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட வனவிலங்கு அதிகாரி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அவர்களிடம் கூறியுள்ளார். மேலும் இது ஒரு தவறான செயல் என்று கூறி அவர்களை கண்டித்து விட்டு, அங்கிருந்து அவர் வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் மேலும் அவர்களது நண்பர்கள் பலரை அழைத்து கொண்டு இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் அவர்களைத் பின்தொடர்ந்து வந்தனர்.

அதன்பின் கொசப்பேட்டை எனும் இடத்தில் காரை வழிமறித்த அவர்கள், அறிவுரை கூறிய வன பாதுகாப்பு அலுவலர் கிரிஷ் மற்றும் அவரது உறவினர்களை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அவர் சிக்மகளூர் புறநகர் காவல் நிலையத்தில் இந்த இளைஞர்களை பற்றி புகார் ஒன்று தெரிவித்துள்ளார். எனவே போலீசார் புகாரை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அறிவுரை கூறியதன் காரணமாக வனவிலங்கு  ஆர்வலரை தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மாறி சம்பவங்கள் தான் அடுத்த நிலைக்கு சென்று பாலியல் வன்முறை குற்றங்களாக அவதாரமெடுக்கின்றன. இளைஞர்கள் மாறினால்தான் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

Previous articleபசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! அலகாபாத் நீதிமன்றம் கருத்து!
Next articleட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்!