இந்த காலத்தில் 30 வயதை தாண்டாதவர்களுக்கு கூட தோல் சுருக்கம் ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறை தான்.இளம் வயதில் தோல் சுருக்கப் பிரச்சனையை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவத்தை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:-
1)தேற்றான் கொட்டை விதை – 50 கிராம்
2)கரிசலாங்கண்ணி கீரை – ஒரு கட்டு
செய்முறை விளக்கம்:-
முதலில் தேற்றான் கொட்டையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இந்த விதையை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கட்டு கரிசலாங்கண்ணி கீரையை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேற்றான் கொட்டையை அதில் போட்டு நாள் முழுவதும் ஊறவிட வேண்டும்.இப்படி 10 தினங்களுக்கு கரிசலாங்கண்ணி கீரை சாறு செய்து தேற்றான் கொட்டையை போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.
பிறகு இதை நிழலில் காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு ஸ்பூன் இந்த பொடி சாப்பிட்டு வந்தால் இளமை தோற்றத்துடன் வாழலாம்.இந்த பொடியை மோர் அல்லது நீரில் கலந்தும் பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 10
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
பத்து பாதாமை தோல் உரிந்து வரும் வரை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் சரும சுருக்கம் ஏற்படாமல் இருக்கும்.