காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!!

Photo of author

By Parthipan K

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!!

Parthipan K

Young woman who lost her virginity due to love affair! Women seek refuge with the police !!

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!!

கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா வயது நாற்பத்தி மூணு. இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு இதே பகுதியில் வீடுமனை ஒன்றை  வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த வீட்டு மணிக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அங்கு பணிபுரியும் இளையராஜாவை அணுகினார் . அப்போது அந்தப் பெண் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்த போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக சென்னை அம்பத்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார்.

அப்போது அந்தப் பெண் கிராம நிர்வாகியிடம் செல்போனில்  தொடர்புகொண்டு தேர்வுக்கான சம்பந்தப்பட்ட விவரங்களை கேட்டு வந்தார். இதில் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்தது.அவ்வப்போது இருவரும் தொலைபேசியில் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில் இளையராஜா அப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அப்பெண்ணும் நேரில் சந்திக்க மாமல்லபுரம் சென்றார்.

அங்கு இருவரும் முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் அங்குள்ள விடுதியில் ஒரு அரை எடுத்து தங்கிவுள்ளனர். அப்போது அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல்  பலாத்காரம் செய்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த இளையராஜா அந்தப் பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதில் மனம் உடைந்த அந்தப் பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இளையராஜா மீது இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர் . மேலும் கிராம நிர்வாக அலுவலர் பெண்ணை மிரட்டி கற்பழித்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.