ஆசையாக இருந்தது அதான் தூக்கி சென்றோம்! இளம்பெண் பாலியல் பலாத்காரம்

Photo of author

By Kowsalya

ஆசையாக இருந்தது அதான் தூக்கி சென்றோம்! இளம்பெண் பாலியல் பலாத்காரம்

Kowsalya

உத்திரபிரதேச மாநிலத்தில் வருங்கால கணவனின் கண் முன்னாடியே தனது மனைவியை 3 பேர் சேர்ந்த இளைஞர் கும்பல் காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு கோவிலிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது 3 பேர் கொண்ட இளைஞர் கும்பல் வழிமறித்து உள்ளது.

 

வருங்கால கணவனை தாக்கிவிட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று காட்டுப்பகுதிக்குள் மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 

உடனே அந்த பெண்ணின் வருங்கால கணவர் தொலைபேசி மூலம் உறவினர்களை தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

 

உடனே அந்த ஆணின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

அவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் இந்த மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மூன்று பேர் கொண்ட இளைஞர்கள் காட்டுப்பகுதிக்குள் மரம் வெட்டச் சென்றவர்கள் என்று கூறினர் இளம் பெண்ணை பார்த்ததும் ஆசையில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.