காவல் நிலையம் எதிரே நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் மக்கள்!

Photo of author

By Parthipan K

காவல் நிலையம் எதிரே நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் மக்கள்!

Parthipan K

புதுச்சேரியில் காவல் நிலையம் எதிரே வாலிபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் எதிரே இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல் நிலையம் எதிரிலேயே வாலிப ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.